முண்டாசுப்பட்டி இயக்குனரின் அடுத்த படம்.....அறிவிச்சாச்சு....

Sekar Tamil
'முண்டாசுப்பட்டி' திரைப்படத்தை இயக்கி, இயக்குனரான ராம் தற்போது தனது இரண்டாம் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக யார் நடிக்க உள்ளார் தெரியுமா?


தெரியாதா.... இதோ வரேன்.... 'முண்டாசுப்பட்டி' திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த விஷ்ணு தான் இந்த படத்தில் நடிக்க போகிறார். இந்த தகவலை விஷ்ணு, தனது டிவிட்டர் வலைத்தள பக்கத்தில், அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது, 


'மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...என்னுடைய அடுத்த ப்ரொஜெக்ட்டை, எனக்கு பிடித்தமான இயக்குநர்களுள் ஒருவரான, 'முண்டாசுப்பட்டி' இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளார்....தகவல்கள் விரைவில்...' என பதிவு செய்துள்ளார். 


மேலும் விஷ்ணு தற்போது அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கும் திரைப்படத்தை, தயாரித்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Find Out More:

Related Articles: