அதேதான்... அதேதான்... ஏலியன்தானா? விஞ்ஞானிகள் ஆய்வு...

Sekar Tamil
போர்ச்சுக்கல்:
என்ன? அது என்ன? உண்மையில் அது என்ன என்று மர்ம உயிரினம் பற்றிய பேச்சுதான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன விஷயம் என்றால்...


போர்ச்சுகல் பாலைவனத்தில் மர்ம உயிரினம் ஒன்று தென்பட்டுள்ளது. அது ஏலியனா... அட அதாங்க வேற்றுகிரகவாசியா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தகவல்தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


ஏலியன்ஸ் உண்மையில் இருக்கிறார்கள் என்று இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான வெளியீடும் வந்ததில்லை. ஆனால் அடிக்கடி ஏலியன்சை பார்த்ததாகவும், இதோ அந்த படம் என்று பல்வேறு வதந்திகள் உலா வந்தப்படியேதான் உள்ளது. இருப்பினும் அமெரிக்காவில் ஏரியா 51 என்று சொல்லக்கூடிய பகுதியில் மட்டும் ஏலியன்கள் அடிக்கடி தென்படுகிறது என்று கூறுகின்றனர்.


 இதனால் அந்த பகுதியை வேற்று கிரகவாசிகள் வந்து செல்லும் பகுதியாகவே மக்கள் அனைவரும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் போர்ச்சுகல் பாலைவனத்தில் மனிதன் போன்ற உருவத்தில் உள்ள மர்ம உயிரினம் ஒன்று நடந்து செல்வது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுதான் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


 இது வேற்றுகிரகவாசிதான் என்று சிலர் உறுதியாக தெரிவிக்கின்றனர். போர்ச்சுகலின் மெடிரா தீவில் இந்த காட்சி பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த காட்சி பதிவு செய்யப்பட்ட இடம் எது என்று சரியான தகவல் கிடைக்கவில்லை. பார்ப்பதற்கு மனித உருவம் போன்று இருந்தாலும் அந்த மர்ம உருவம் ஏலியன்தான் என்று மக்கள் கருதுகின்றனர். இதனால் இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளனர்.



Find Out More:

Related Articles: