'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தை அடுத்து விஷ்ணு விஷால், சுசீந்திரன் இயக்கிய 'மாவீரன் கிட்டு' திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ரீ திவ்யா நடித்தார். மேலும் பார்த்திபன் மற்றும் சூரி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு 37 நாட்களாக நடைபெற்று, நிறைவடைந்தது. இதையடுத்து தற்போது இதன் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.விஷ்ணு மற்றும் ஸ்ரீ திவ்யா இருவரும், இந்த படத்திற்கான, டப்பிங் பணிகளை நேற்று தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் 1-ந்தேதி வெளிவருகிறது. இதனை தொடர்ந்து டி.இமான் இசையமைப்பில் உருவான இப்பட பாடல்களும் வெளிவரவுள்ளன. ஏசியன் கம்பைன்ஸ் மற்றும் நல்லுசாமி பிக்டர்ஸ் ஆகிய இருநிறுவனமும் இந்த படத்தை தயாரித்துள்ளது.
வரும் நவம்பர் மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.