கனவு நினைவானது... பெருமித மகிழ்ச்சியில் ஆர்ட் டைரக்டர்...

Sekar Tamil
சென்னை:
கனவா... இல்லை நினைவா... மனம் பூரித்து போய் காற்றில் மிதக்காத குறையாக இருக்கிறாராம் இவர். யார் என்று பார்ப்போமா!


அவர் கலை இயக்குனர் அமரன்தான். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியவர்தாதன் இவர்.


இதில் வந்த அணைக்கட்டு அரங்கு அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஒரு கனவு... அதை கனவு என்பதை விட லட்சியம் என்று சொல்லலாம். அந்த லட்சியம்... டைரக்டர் மணிரத்னம் படத்திற்கு அரங்கு அமைக்க வேண்டும் என்பதுதான். தற்போது அது காற்று வெளியிடை படத்தின் வாயிலாக நிறைவேறி உள்ளது.  இதனால் தன்னுடைய நீண்டநாள் கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறார்.


இந்த வாய்ப்பு இவருக்கு எப்படி கிடைத்தது தெரியுங்களா? பிரபல இயக்குனரும், வீணை வித்வானுமாகிய மறைந்த ‘வீணை’ பாலச்சந்தருக்கு எடுக்கப்பட்ட விழாவுக்கு அமரன் அரங்கம் அமைக்க...  விழாவிற்கு தலைமை வகித்த மணிரத்னம் அரங்கை பார்த்து பிரமிக்க தன் படத்தில் ஒப்பந்தம் செய்ய... இப்போ... அமரன் செம ஹேப்பி அண்ணாச்சி.



Find Out More:

Related Articles: