பேய் ஆட்சியை முறியடிக்கும் பக்தி படம்

Sekar Tamil
ஒரு காலத்தில், பக்தி திரைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தன. ஆனால் தற்போது பேய் படங்களுக்கு தான் மவுஸ்.இதனால் பக்தி திரைப்படங்களை உருவாக்க, யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. 


இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது 'வன பத்ரகாளி' என்ற பக்தி படம் உருவாகி வருகிறது. கே.எம்.ஏ கலைவாணி மூவீஸ் மற்றும் ஜே.எம்.பி இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றது. இதில் சீரியல் நடிகை சந்தியா, பத்ரகாளியாக நடிக்கிறார். 


மேலும் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ், மனிஷ், சந்தோஷ், சரவணன், பவித்ரா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். அம்மனுக்கும், அம்மனின் பக்தருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை கொண்டு இப்படம் உருவாகுகிறது. 


மேலும் இப்படத்தை கே.எம். ஆனந்தன் என்பவர் இயக்குகிறார். ஆதிஷ் உத்ரியன் இசையமைக்கிறார்.


Find Out More:

Related Articles: