பிரக்காஷ்ராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும்!!!

frame பிரக்காஷ்ராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும்!!!

SIBY HERALD


தமிழரே தமிழரை ஆள வேண்டும் என்ற கருத்தை எதிர்ப்பதாகக் கூறிய நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி அவருக்கு கெடு விதித்துள்ளார். அந்தக் கட்சியின் தலைவர் கி. வீரலட்சுமி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், தமிழரே தமிழரை ஆள வேண்டும் என்ற கருத்தை எதிர்ப்பதாக கன்னட நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

 

Image result for prakash raj

இந்த சர்ச்சை கருத்துக்கு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வருகிறது 28ம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜின் வீட்டின் முன் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழர்களின் கசப்பான உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் சத்யராஜ் தனது சொந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

Image result for prakash raj




இதனை சுட்டிக்காட்டி கன்னட அமைப்புகள் சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே ஏப்ரல் 28ம் பாகுபலி 2 திரைப்படம் வெளியிடப்படும் என்று மிரட்டின. இதனையடுத்து நடிகர் சத்யராஜ் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் விடியோ முலம் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் கன்னட நடிகர் பிரகாஷ்ராஜின் தமிழர்களுக்கு விரோத கருத்தை கண்டித்து தமிழர் முன்னேற்றப்படை போர்க் கொடி தூக்கியுள்ளது.


Find Out More:

Related Articles: