'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஜே.தி.சக்கரவர்த்தி அதன் பிறகு 'ஆணை', சர்வம்', 'கச்சேரி ஆரம்பம்' உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கிளாமர் நடிகை அனுகிருதியை ஹைதராபாத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். இருவரும் காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த திருமணம் ரகசியமாக நடைபெற்றுள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் அனுகிருதி, பல படங்களில் கிளாமராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.