பிரபல நடிகருடன் கைகோர்த்த மெட்ராஸ் நடிகை

Sekar Tamil
'மெட்ராஸ்' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை கேத்ரின் திரேசா தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடித்த திரைப்படம், நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதையடுத்து அவர் தற்போது ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் தளபதி இயக்கவுள்ள திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதில் ஹீரோயினாக கேத்ரின் திரேசா நடிக்கவுள்ளார். 


மேலும் இயக்குனர் பொன்ராமிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கிராம பின்னணியில் உருவாக உள்ளதாம். இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகின்றன. 


Find Out More:

Related Articles: