கபாலியால்.....ப்ரியா ஆனந்த் ஆப்செட்

Sekar Tamil
நடிகை ப்ரியா ஆனந்த், கவுதம் கார்த்திக் உடன் இணைந்து 'முத்துராமலிங்கம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பின்தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் ப்ரியா ஆனந்த் பள்ளி மாணவியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து முதன்முறையாக மலையாள திரைப்படம் ஒன்றில் பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று படப்பிடிப்பில், அவருக்கு விடுமுறை அளிக்காததால் அவரால் கபாலி திரைப்படத்தை பார்க்க முடியவில்லை. 


அவரது நண்பர்கள் சிலர், கபாலி திரைப்படத்தை முதல் ஷோவில் பார்த்துவிட்டு, அந்த மகிழ்ச்சியை அவரிடம் வெளிப்படுத்தியுள்ளனர். இதை கேட்ட, ப்ரியா ஆனந்த் தன்னால் பார்க்க முடியவில்லையே சூப்பர் ஸ்டாரின் படத்தை என்று அப்செட்டாகி விட்டாராம்.



Find Out More:

Related Articles: