நாங்க இருக்கோம்... ஆப்கனுக்கு இந்தியா கொடுக்குது ஆயுதங்கள்...

Sekar Tamil
புதுடில்லி:
நாங்க இருக்கோம்... எங்களிடம் வாங்கிக்கோங்க என்று ஆப்கனுக்கு ஆயுத சப்ளை செய்ய உள்ளது இந்தியா...


பயங்கரவாதிகளை எதிர்த்து போராட ஆப்கனுக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்க உள்ளதாக அந்நாட்டிற்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.


கடந்த 15 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஆப்கனுக்கு இந்தியா பொருளாதார உதவி செய்துள்ளது. அங்கு பாக்., ஆதிக்கம் பெறுவதை தடுக்கும் வகையிலும், தனது செல்வாக்கை உயர்த்தவும் ஆயுதங்கள் இந்தியா வழங்க உள்ளது.


கடந்த டிசம்பர் மாதம், ஆப்கனுக்கு நான்கு போர் ஹெலிகாப்டர்கள் வழங்குவதாக இந்தியா அறிவித்திருந்தது. இதையடுத்து இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் ஷாயிதா முகமது அப்தாலி கூறுகையில், பிராந்திய பாதுகாப்பு மோசமாகி வருகிறது.


தலிபான் ஐ.எஸ்., மற்றும் பல பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த ஆப்கன் ராணுவத்திற்கு ராணுவ ஆயுதங்கள் தேவைப்படுகிறது.
நாங்கள் மோசமான சூழ்நிலையில் உள்ளோம். இது இந்தியா உட்பட அனைவருக்கும் கவலையளிக்கும் செய்தி என்று தெரிவித்திருந்தார்.


வரும் 29ம் தேதி ஆப்கன் ராணுவ தளபதி டில்லி வர உள்ளார். அப்போது, தங்களுக்கு தேவையான ஆயுத தேவை குறித்து பட்டியல் அளிக்க உள்ளார். இது தொடர்பாக அவர் அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


என்ன ஆயுதங்கள் கொடுக்க உள்ளனர் என்று தெரிவிக்காவிட்டாலும் இந்தியா ஆப்கனுக்கு கண்டிப்பாக தேவையான ஆயுதங்கள் மற்றும் மருந்து உட்பட பலவற்றை வழங்கும் என்று தெரிகிறது.



Find Out More:

Related Articles: