சிம்புவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஸ்டார்ட் ஆகிடுச்சு

Sekar Chandra
சென்னை:
சிம்புவின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கிடுச்சாம். எங்கே ஆரம்பிச்சு இருக்காங்க தெரியுங்களா? திண்டுக்கல் பக்கத்தில். ஆமாங்க.


சிம்புவின் மூன்று வேடத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கு. முதல்நாள் படப்பிடிப்பில் நடிகை ஸ்ரேயாவும் கலந்து கொண்டிருக்கிறார். திண்டுக்கல் அருகே தாடிகொம்பு என்ற ஊரில் படப்பிடிப்பு நடந்து இருக்கு. 


இங்குள்ள சௌந்தர ராஜ பெருமாள் கோயிலில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார் ஸ்ரேயா. அதுமட்டுமா... அந்த கோயில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்தது என்றும் சொல்லியிருக்கார்.  இந்த கோயிலில்  படப்பிடிப்பு நடந்ததா? அல்லது வேறு எங்கும் நடந்ததா என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த படம் குறித்த செய்திகள் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.




Find Out More:

Related Articles: