புதுசு கண்ணா... புதுசு... பொறுப்பாளர்கள் புதுசு...திமுக அறிவிப்பு

frame புதுசு கண்ணா... புதுசு... பொறுப்பாளர்கள் புதுசு...திமுக அறிவிப்பு

Sekar Chandra
சென்னை:
புதுசு கண்ணா... புதுசு... என்று தூத்துக்குடி, நாகை மாவட்டங்களில் கல்தா கொடுத்த பழைய ஆட்களுக்கு பதிலாக புதிய மாவட்ட பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமனம் செய்துள்ளது. 


இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கே.ராஜாராமுக்கு பதிலாக அ.சுப்ரமணியன் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


நாகை வடக்கு மாவட்ட செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம், தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.


இவர்களுக்கு பதிலாக நிவேதா எம் முருகன் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளராகவும், நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக   என்.கெளதமனும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகு திமுகவில் களையெடுக்கும் வைபவம் கனஜரூராக நடந்து வருகிறது.


Find Out More:

Related Articles:

Unable to Load More