என் குடும்பத்தினர் என்னை என்க்ரேஜ் செய்யலை... சிவகார்த்தி

frame என் குடும்பத்தினர் என்னை என்க்ரேஜ் செய்யலை... சிவகார்த்தி

Sekar Chandra
சென்னை:
இல்லீங்க எனக்கு என் பேமிலி ஊக்கம் கொடுக்கலை என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கார். ஏன் அப்படி சொன்னார்? விஷயம் இருக்கே...


ரெமோ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடந்து வருது. இந்த பணியில் சிவகார்த்தி ரொம்பவே பிஸி. பரபரன்னு நிற்க நேரம் இல்லாம இருக்கார். இதற்கிடையிலும் அவர் தெலுங்கு யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி கொடுத்தார். அப்போதுதான் அப்படி சொன்னார். ஆனால் அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கு. 


அவர் சொன்னது இதுதான்... ‘நான் சிறு வயதிலேயே எங்கள் வீட்டில் மிமிக்ரி செய்துக்காட்டுவேன். ஆனால், அவங்க எதுவுமே சொல்ல மாட்டாங்க.  ஏன் தெரியுங்களா? நானோ ஆவரேஸ்தான். அப்படி இருக்கும்போது மிமிக்ரி பண்றதை ஊக்கம் கொடுத்தா நான் இன்னும் படிக்காம போயிடுவேன்னு அவங்களுக்கு பயம். அதான் நான் நல்லா மிமிக்ரி செய்தாலும் என்க்ரேஜ் செய்யலை. ஆனா அந்த மிமிக்ரிதான் இப்போ என்னை இந்தளவுக்கு கொண்டு வந்து இருக்கு என்று சொல்லியிருக்கார்.



Find Out More:

Related Articles:

Unable to Load More