சென்னை:
ஆரம்ப காலத்தில் யோகா நடிகை பார்ட்டி குருவியா இருந்தவராம். நடிப்பு "பிஸி"யாக்க பார்ட்டின்னா என்ன என்று கேள்வி எழுப்பும் நிலைக்கு அவர் மாறிவிட்டார்.
தமிழ், தெலுங்கு என பிஸியோ பிசி. இதனால் பார்ட்டி பக்கமோ தலையை காட்டாத அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் ஆன்மீகமும் அவருக்கு பிடித்த ஒன்றாக மாறியது.
இப்படியே போனா நீ சாமியார்தான் என்று கூட இருந்த அல்லக்கைகள் உடுக்கை எடுத்து அடிக்க இப்போது மீண்டும் பார்ட்டிகளில் இவர் தலை தென்பட ஆரம்பித்து விட்டதாம்.
பழைய தோழிகளுடன் பெங்களூர், ஐதராபாத் நட்சத்திர ஓட்டல்களில் இவரை பார்ப்பவர்கள் நல்லா இருந்த தேரை பள்ளத்தில் உருட்டி விட்டவர்களை சபித்து வருகின்றனர். உடுக்கை சத்தம் கேட்டு சாமி வந்தால் சரி... பாருக்கு போனால் சரியா... சரியா...