இன்றைய ஆரோக்கிய குறிப்பு தகவலில், அன்னாசி பழத்தை உண்பதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி நாம் விரிவாக பார்க்கலாம்.
அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அதை தூசி படாத படி, வெயிலில் உலர வைத்து, நன்கு காய்ந்த அன்னாசி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து முடி கொள்ள வேண்டும்.
இந்த அன்னாசி பழ வற்றலை, பாலுடன் சேர்த்து ஊற வைத்து, உறங்குவதற்கு முன்பு குடித்து வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். இதை தொடர்ந்து 2 மாதம் பின்பற்றி வந்தால், நல்ல பலன் கிட்டும்.
மேலும் பித்த சம்பந்தப்பட்ட நோய் இருப்பவர்களும், இதை சாப்பிட்டால் குணமடையும்.
அன்னாசி பழம் உண்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இது சுறுசுப்பை உண்டாக்கும். நாவறட்சியை நீக்கும்.