சென்னை:
கமலுடன் நடித்த நடிகையை கொத்திக் கொண்டு வந்துவிட்டாராம் விவேக்... என்னப்பா இது என்று அதிர்ச்சி அடையாதீர்கள். விஷயத்தை பாருங்கப்பா...
காமெடி நடிகர்கள் ரூட்டு மாத்தி இப்போ ஹீரோக்களாக மாறி வருகிறார்கள். சமீபத்தில் சந்தானத்தில் தில்லுக்கு துட்டு அவரை வேறு தளத்திற்கு கொண்டு போய் சேர்த்துவிட்டது. இதில் தற்போது விவேக்கும் இடம் பிடிக்க வருகிறார்
ஏற்கனவே இவர் ஹீரோவாக நடித்த படங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை. சுமாராக போனாலும் இவர் பல படங்களில் காமெடி, குணசித்திரமாக நடிப்பதை கைவிடாமல் இருந்தார். இந்நிலையில் இவரை ஹீரோவாக்காமல் விடமாட்டோம் என்று தொடர்ந்து இயக்குனர்கள் முற்றுகையிட தற்போது துப்பறியும் சங்கர் என்ற படத்தில் ஹீரோவாக புக் ஆகி உள்ளார்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாகத்தான் கமலுடன் நடித்த கமாலினி முகர்ஜியை புக் செய்துள்ளார்களாம். புதுமுக இயக்குனர் இயக்கும் இந்த படம் 1960-களில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இருக்கும் என்று கோலிவுட் கோவிந்து சொல்லியிருக்காருங்க...
கமாலினி முகர்ஜி