பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்!

SIBY HERALD
விவசாயிகள் காக்கும் வகையில் 10 ஆயிரம் விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் ஏற்படுத்தப்படும். 2024க்குள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என மத்திய அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.2-வது முறை ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி அரசு இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறது.


நாட்டின் 2-வது பெண் நிதி அமைச்சர்   நிர்மலா சீதாராமன் தனது முதலாவது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கீழ் 1.95 கோடி வீடுகள் மத்திய அரசு கட்டவுள்ளது.



விவசாயிகள் நலனுக்காக 10 ஆயிரம் விவசாயிகள் உற்பத்தி நிறுவனம், ஒவ்வொரு கிராமத்திலும் திடக்கழிவு மேலாண்மை விரிவுபடுத்த திட்டம்,  2024க்குள் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாக்கப்பட்ட  குடிநீர்,மகாத்மா காந்தி கொள்கைகள், சிந்தனகள் இளைஞர்கள் பரப்ப காந்தி பீடியா,கேலோ இந்தியா  திட்டத்தில்   தேசிய விளையாட்டு கல்வி வாரியம்,உஜ்வாலா  திட்டத்தில்   ஆண்டுதோறும் 35 கோடி எல்இடி பல்பு விற்பனை மூலம் ரூ. 18 ஆயிரத்து 341 கோடி சேமிப்பு" இது போன்ற அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 


Find Out More:

Related Articles: