
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு
துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்துள்ள காதல், ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார். பிப்ரவரி 28 அன்று வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில்
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் பேசியது...
இந்தப்படத்திற்கு பின்னணி இசை மற்றும் ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன். உங்களுக்கு மிக பிடிக்கும் என நம்புகிறேன். வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி.
ஒளிப்பதிவாளர் பாஸ்கர் பேசியது...
கௌதம் சாருக்கு நன்றி அவருடன் வேலை செய்ய வேண்டுமென்பது நெடுநாள் கனவு. துல்கர் மிக எளிமையான மனிதர். படப்பிடிப்பில் அவர் இருந்தால் சந்தோஷமாக இருக்கும். ரிது வர்மா அழகான ஹீரோயின். மிக திறமை வாய்ந்தவர். படம் நன்றாக வந்துள்ளது. எல்லோருக்கும் நன்றி
உடை வடிவமைப்பாளர் நிரஞ்சனி பேசியது ....
இயக்குநருக்கு நன்றி. இது கனவு மாதிரி இருக்கிறது. ஆனால் இன்று இங்கு நிற்க இயக்குநர் தான் காரணம். உடை வடிவமைப்பிற்காக தான் சென்றேன் ஆனால் என்னை நடிக்க வைத்து விட்டனர். என்னை நம்பி வாய்ப்பளித்தற்கு நன்றி. கௌதம் சார் படத்தில் வேலை செய்திருக்கிறேன் ஆனால் இப்படத்தில் கௌதம் சாருக்கு உடை வடிவமைத்திருக்கிறேன் அது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. இந்தபடத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ரிது வர்மா மிகவும் நட்பாக இருந்தார். துல்கர் நன்றாக நடித்திருக்கிறார். நான் நடித்திருக்கும் படத்தை திரையில் காண நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி.
நாயகி ரிது வர்மா பேசியது
எல்லோருக்கும் வணக்கம். தமிழ் எனக்கு குறைவாகவே தெரியும். இது தமிழில் எனது முதல் மிகப்பெரிய படம். நிறைய எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன். இயக்குநர் வெகு காலமாக இந்தப்படத்திற்காக உழைத்திருக்கிறார். துல்கர் மிகச்சிறந்த நடிகர் அவரின் காந்த ஈர்ப்பு 10 சதவீதம் என்னிடம் இருந்தாலே போதுமென நினைப்பேன். கௌதம் சார் என்னை வைத்து படம் இயக்கியுள்ளார். அவருடன் இந்தப்படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. படம் எல்லோருக்கும் பிடிக்கும்படி இருக்கும். நன்றி.
நடிகர் ரக்ஷன் பேசியது...
டிவியில் வேலை செய்யும் போது படம் நடிக்க ஆசைப்பட்டேன். தேசிங்கு அண்ணன் இந்த வாய்ப்பை தந்துள்ளார். அவருக்கு நன்றி. துல்கர் என்னை ஒரு சகோதரன் போல் பார்த்து கொண்டார். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். எல்லோருக்கும் நன்றி.
கௌதம் வாசுதேவ் மேனன் பேசியது...
ஒரு நடிகராக புதிய பயணம் தொடங்கியிருக்கிறது. இது எதுவுமே திட்டமிட்டது இல்லை ஆனால் நன்றாகவே இருக்கிறது. தேசிங்கு என்னை அணுகிய விதம் எனக்கு பிடித்திருந்தது. எஸ் ஜே சூர்யா நடிக்க வேண்டிய பாத்திரம். துல்கரை எனக்கு தெரியும் அவர் தேர்ந்தெடுத்தால் கதை நன்றாக இருக்குமென தெரியும். துல்கருடன் பணிபுரிந்தது சந்தோஷம். ரிது வர்மா, நிரஞ்சனி என்னிடம் வேலை செய்திருக்கிறார்கள். அவர்களுடன் இந்தபடத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. இளைஞர்கள் புத்துணர்வுடன் வேலை செய்துள்ளார்கள். நான் நடித்த பகுதிகள் பார்த்தேன் எனக்கு பிடித்திருந்தது. படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.