சரும அழகை கூட்டும் கஸ்தூரி மஞ்சள்

Sekar Tamil
சாதாரண மஞ்சளை விட கஸ்தூரி மஞ்சளிற்கு அதிக சக்தி உண்டு. இதை நாம் தினமும் பால் உடன் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், முகம் பளபளாகும். 


தோல் நோய்களை குணப்படுத்துவதில் கஸ்தூரி மஞ்சளிற்கு முக்கிய பங்கு உண்டு. படை, சொறி, சிரங்கு, தேமல் போன்றவைகளுக்கு கஸ்தூரி மஞ்சள் உபோயோகப்படுத்தி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். 


பெண்கள் சிலருக்கு ஆண்களை போல மீசை, தாடி இருப்பதுண்டு. இதை போக்க தொடர்ந்து, கஸ்தூரி மஞ்சளை பூசலாம். தேவையற்ற முடிகள் வளர்வது தடைப்படும். 


பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.


கஸ்தூரி மஞ்சள் உடன் பன்னீர் சேர்த்து, முகத்தில் பூசி தினமும் குளித்து வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளி, பருக்கள் மறையும். 


Find Out More:

Related Articles: