பாரீஸ்:
ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில் என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரயில் என்ஜின்கள் டீசல் மற்றும் மின்சாரம் மூலம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மாற்று ஏற்பாடுகளில் நிபுணர்கள் மிக தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இந்நிலையில்தான் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் என்ஜினை உருவாக்கி உள்ளது.
இந்த ரயில் என்ஜின் அடுத்த ஆண்டு ஜெர்மனியில் ஓடும் ‘கொராடியா லின்ட்’ என்ற பயணிகள் ரயிலில் பொருத்தப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.