அய்யம்பட்டி டூ அமெரிக்கா... இன்டர் நெட்டுக்கு 25 வயசு முடிஞ்சிடுச்சு...

frame அய்யம்பட்டி டூ அமெரிக்கா... இன்டர் நெட்டுக்கு 25 வயசு முடிஞ்சிடுச்சு...

Sekar Tamil
சென்னை:
அய்யம்பட்டியில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்காவில் உள்ள உறவினர்களுடன் பேசுறோமோ... அந்த இன்டர்நெட் பயன்பாட்டுக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆயிடுச்சு தெரியுங்களா... கால் நூற்றாண்டு ஓடியோ போயிடுச்சு...


டெக்னாலஜி டெவலப்மெண்ட்... இந்த வார்த்தையும், அறிவியலின் அளப்பறிய முடியாத கரங்களும்தான் அமெரிக்காவில் உள்ளவரை... ஆண்டிப்பட்டியில் உள்ளவருடன் இணைக்கிறது. இந்த வளர்ச்சி அசுர வளர்ச்சி என்றே சொல்ல வேண்டும். அந்த காலத்தில் ரேடியோதான் மக்கள் செய்திகள் அறிந்து கொள்ள இருந்த ஒரே தகவல் சாதனம் என்று சொல்லலாம். பின்னர் அந்த இடத்தை டி.வி. ஆக்கிரமித்து.

Displaying Spl 1.jpg



இருப்பினும் இன்டர்நெட் என்ற விஞ்ஞான அசுரன் தன் வலிமையான கரங்களால் மக்களை அள்ளி எடுத்த பின்னர் ஏற்பட்ட மாற்றங்களை வார்த்தைகளால் சொல்லி மாளாத ஒன்று. அமெரிக்காவில் இருக்கும்.. ஒன்றுவிட்ட... சித்தப்பாவிற்கு அண்ணனின் மாமியார் சொந்தத்தில் வரும் உறவினருடன் வீட்டில் உட்கார்ந்தபடி ஸ்கைப்பில் பேசி மகிழ்கிறோம். 

skype க்கான பட முடிவு


அவரும் அமெரிக்காவில் இது சூப்பர்... அது ஆபர் என்று சொல்கிறார். இந்த வளர்ச்சி அசுரத்தனமானதுதானே... ஆனால் இதற்கு அஸ்திவாரம்.. இன்டர்நெட்தான். இந்த இன்டர் நெட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Displaying Spl 3.jpg


தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே நம் கைக்குள் கொண்டு வந்து சேர்த்துவிட்டது என்றே சொல்லாம். தந்தி தபால்கள் சென்று அடையும் நேரத்தில் இப்போது பல தகவல்களை விநாடி நேரத்தில் நாம் பரிமாறிக்கொள்ள இந்த தொழில்நுட்ப வளர்ச்சிதான் காரணமாக அமைந்துள்ளது. 


பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால் அதை தொடங்கியவர்களை நினைத்து பார்க்க முடியாத ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அது இன்டர் நெட் வழியாக கடைகோடி கிராமத்தில் உள்ளவர்களையும் சென்றடைய செய்கிறது;. 


சமீபத்திய புள்ளி விவரம் என்ன சொல்லுது தெரியுங்களா? உலகில் உள்ள சுமார் 300 கோடி மக்கள் இன்டர்நெட்டை என்று. என்ன ஆச்சரியத்தில் வாய் ஆட்டோமேட்டிக்காக திறக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை. இந்த வளர்ச்சியின் தொடக்க புள்ளியாக அமைந்த நாள் ஆகஸ்ட் 23, 1991.


இங்கிலாந்தை சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ் லி www என்னும் புரோட்டாக்காலை உருவாக்கி ஆகஸ்ட் 23, 1991ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அடித்தளமான இந்த புரோட்டகாலுக்கு 25 வயது நிறைவடைந்துவிட்டது.

டிம் பெர்னர்ஸ் லி


1960களில்தான் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் அதிகரிக்க தொடங்கியது என்று கூறலாம். ஆனால், ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னொரு கம்ப்யூட்டருக்கு தகவல்கள் பரிமாற்றம் செய்துகொள்ள வழியே இ இல்லாத நிலை. அப்போது அமெரிக்காவின் டார்ட்மவுத் மற்றும் பெர்க்லீ பல்கலைகழகங்கள் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களை பெருமளவில் பயன்படுத்தின.


இந்த பிரச்னை குறித்து ஐ.பி.எம் நிறுவனத்திடம் தெரிவித்தன. அப்புறம் என்ன குதித்தனர் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஒரு கம்ப்யூட்டரிலிருந்து மற்றொன்றுக்கு தொடர்பை உருவாக்க ‛கலெக்டிக் நெட்வொர்க்' என்ற இணைப்பை லிக்லைடர் உருவாக்கினார்.


இது பல்கலைகழகங்களில் வெற்றிகரமானது. அப்படியே ராணுவத்திற்கும் தாவியது. ஆனால் ராணுவத்தின் தகவல்கள் ரொம்ப ரகசியமானதாயிற்றே... இதற்காக ‛ஆர்பாநெட்' எனும் பெயரில் பயன்படுத்தப்பட்டது. இப்படியே பல உருமாற்றங்கள் பெற்றது. 


தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க... 1968 ல் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கண்காட்சியில் டக்லஸ் ஏங்கல்பெர்ட் என்பவரால் கம்ப்யூட்டர் மவுஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.


பின்னர்தான் 1991 ல் www எனப்படும் புரோட்டோகால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அப்போது தொடங்கிய வேகம்... இன்று அசுர மராத்தான் ஓட்டமாக மாறிவிட்டது. அன்று அவ்வளவு பெரிய கம்ப்யூட்டரில் உட்கார்ந்து இன்டர் நெட்டில் மேய்ந்து காலம் போயே போச்சு... இப்போ... உள்ளங்கையில் செல்போனை வைத்துக் கொண்டு நம்ம ஆளுங்க செய்யும் சேட்டை இருக்கே... இதுதான் இன்டர்நெட்டின் அசுர வளர்ச்சி. அதாவது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி. 


இந்த 25 வருடத்திற்குள் தற்போதைய தலைமுறையினர் 4 ஜி என்று வந்து விட்டார்கள். இன்னும் சில ஆண்டுகளுக்குள் இன்டர் நெட் என்பது இன்னும்... இன்னும் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. வளர்ச்சியிலும் ஆபத்தும், வேதனையும் கலந்து நிற்கிறது.


இன்டர்நெட்டின் பயன்பாடு மக்களுக்க ஆக்கப்பூர்வமான சேவைகளை தந்தாலும்... அதிலும் பல பிரச்னைகள் உள்ளன. 1000 நன்மைகள் இருந்தாலும் 10000 தீமைகளும் இருக்கிறதே... பயன்படுத்துபவர்களின் செயல்தான் இதை தீர்மானிக்கிறது. நல்லதற்கு உபயோகப்படுத்தினால் பயன் இன்னும் அதிகரிக்கும்... இந்த கால் நூற்றாண்டில் நன்மைகள் குறைவாக இருந்துள்ளது. இனி வரும் காலங்களில் இன்டர் நெட்டின் பயன்பாடு மேலும் மேலும் நல்லவற்றை அளிக்கட்டும்.


Find Out More:

Related Articles: