ஓய்வோ... ஓய்வு... கோல்ப் விளையாடும் கேப்டன் டோனி...

frame ஓய்வோ... ஓய்வு... கோல்ப் விளையாடும் கேப்டன் டோனி...

Sekar Tamil
புதுடில்லி:
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் இப்போது கோல்ப் விளையாடி நேரத்தை செலவழித்து வருகிறார் டோனி.


இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகை போட்டிக்கும் கேப்டனாக இருந்தார் மகேந்திர சிங் டோனி. பின்னர் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்று வி்ட்டார். இதனால் இப்போது இவருக்கு செமத்தியாக ஓய்வு கிடைத்து வருகிறது.


இந்திய அணி ஐ.பி.எல். தொடரில் விளையாடிய பின் வெஸ்ட் இண்டீஸ் சென்றது. அங்கு நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றதால் டோனி போகலையா... பின்னர் புளோரிடாவில் நடந்த 2 டி20 போட்டியில் மட்டும் பங்கேற்றார்.


தற்போது இந்தியா-நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் விளையாட இருக்கிறது. இதனால் டோனிக்கு நீண்ட நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. இதையடுத்து இவர் கோல்ப் விளையாடி மகிழ்ந்து வருகிறாராம்.


கோல்ப் விளையாடும் படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் இணைய தளத்தில் டோனி வெளியிட்டு ‘‘கோல்ப் விளையாடுவதற்கு அருமையான வானிலை மற்றும் சூழ்நிலை’’ என்று குறிப்பிட்டுள்ளார். நடத்துங்க சாரே... நடத்துங்க... இனி கோல்ப்பிலும் ஒரு கை பார்க்க முடிவு செய்திட்டீங்க...


Find Out More:

Related Articles:

Unable to Load More