கவனிக்காத அரசு... வறுமையில் வாடும் ஹாக்கி பயிற்சியாளர்...

Sekar Tamil
கோரக்பூர்:
கவனிக்காத அரசு... காயும் வயிற்றுக்காக பிரபல பயிற்சியாளர் சைக்கிளில் டிராக் சூட் விற்று வாழ்க்கை நடத்தும் கொடுமை நம் நாட்டில் மட்டும்தாங்க நடக்கும். விஷயம் என்னன்னா?


சர்வதேச அளவில் 8 வீரர்கள் மற்றும் 50 உள்ளூர் ஹாக்கி வீரர்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளர் அவர். தனது வறுமை காரணமாக தற்போது சைக்கிளில் டிராக் சூட் விற்று வருகிறார். இப்படி விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் கண்டுக்கொள்ளாத நிலை நீளும் நிலை நம் நாட்டில் மட்டுமே நடந்து வருகிறது.


இந்திய பெண்கள் ஹாக்கி அணி துணை கேப்டன் நிதி குலார் உட்பட பல வீராங்கனைகளுக்கு பயிற்சியளித்தவர் முகமது இம்ரான். தற்போது வறுமை நிலையில் வயிற்று பாட்டுக்காக பெரிதும் தவித்து வருகிறார். இவர் பணிபுரிந்து வந்த பெர்டிலிசேசன் கார்பரேசன் ஆப் இந்தியா நிறுவனம் மூடப்பட்டதால் இவர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


இவரிடம்தான் ரிடா பாண்டே, ரஜ்னி சவுத்ரி, சஞ்சீவ் ஒஜா, பிரதீமா சவுத்ரி, ஜனார்தன் குப்தா மற்றும் சன்வர் அலி ஆகியோர் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.


மாதந்தோறும் ரூ.1000 மட்டுமே பென்சனாக கிடைக்கும் நிலையில் மகள் திருமணத்திற்காக சைக்கிளில் சென்று டிராக் சூட் மற்றும் துணிகள் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.  இவரது நிலையை மத்திய, மாநில அரசுகள் கவனிக்குமா? அல்லது வழக்கம் போல் கண்டு கொள்ளாமல் காலம் தள்ளுமா என்பதுதான் தற்போதைய பெரும் கேள்வி..? அரசுகளே என்ன செய்ய போகிறீர்கள்.


Find Out More:

Related Articles: