தேசிய விருது நடிகையின் சந்தோசம்

SIBY HERALD
நடிகை வித்யா பாலன் பாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த படமான டர்ட்டி பிக்ச்சர் படத்துக்காக தேசிய விருது பெற்றார். நடிப்பிலும் சரி கவர்ச்சியிலும் சரி குறையே வைத்ததில்லை வித்யா பாலன். இந்நிலையில் அடுத்ததாக அவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.



முதல் தெலுங்கு படமாக பாலகிருஷ்ணா ஜோடியாக என்.டீ. ஆர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை க்ரிஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி அவர் கூறுகையில் இந்த பட குழுவினர் மிகவும் சிறப்பான முறையில் வேலை செய்கிறார்கள்.



காலை ஒன்பது மணிக்கு ஷூட்டிங் தொடங்கி மாலை ஆறு மணிக்கு கரெக்ட்டாக முடிக்கும் நேரத்தை வீணாக்காதவர்கள் என்று என்.டி. ஆர் பட குழுவினரை வித்யா பாலன் புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. 


Find Out More:

Related Articles: