ஹராரே:
பதக்கம் வெல்லாத ஒலிம்பிக் வீரர்களுக்கு சிறை என்று ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரியோ ஒலிம்பிக்கிற்கு ஜிம்பாப்வே தரப்பில் மொத்தம் 31 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆனால் ஒரு வீரர்கள் கூட பதக்கம் வெல்லவில்லை. இதனால் கடுப்பான... ஜிம்பாப்வே நாட்டு அதிபர் ராபர்ட் முகாபே, வெறுமனே தேசியக் கொடியை தாங்கி, அணிவகுப்பில் பங்கேற்கவும், தேசிய கீதம் பாட மட்டுமே அனுப்பவில்லை. பதக்கம் வெல்லாத எலிகளுக்கு அதிகத் தொகை செலவிழத்திருக்கிறோம்' எனக் கொதித்து விட்டாராம்.
தொடர்ந்து ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ஜிம்பாப்வே வீரர் வீராங்கனைகள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார் என்று தகவல்கள் பரபரத்தன. இச்செய்தியை அந்நாட்டு இணையதளம் ஒன்று வெளியிட மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு உருவானது.
ஆனால் இச்செய்தியில் உண்மையில்லை என்று ஜிம்பாப்வே அரசு விளக்கம் அளித்துள்ளது.