ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்...

Sekar Tamil
ரியோ டி ஜெனிரோ:
முதல் பதக்கம் பெற்று தந்துள்ளார் வெண்கல  மங்கை... அட தங்க மங்கைன்னு சொல்லத்தான் ஆசை. ஆனால் கிடைத்தது வெண்கலப்பதக்கம் இல்லியா... ஒலிம்பிக்கில் கிடைத்த முதல் பதக்கமும் இதுதான்.


ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதுதான் இந்தியாவிற்கு ரியோ ஒலிம்பிக்கில் கிடைத்துள்ள முதல் பதக்கம் ஆகும்.


ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை ‛பிரீ ஸ்டைல்' பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதினார்.


பரபரப்பாக நடந்த இப்போட்டியில் முதலில் 0-5 என பின் தங்கியிருந்த சாக்ஷி கடைசி நிமிடத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு அடுத்தடுத்து புள்ளிகள் பெற்றார். முடிவில் 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற சாக்ஷி வெண்கலப் பதக்கம் வென்றார். இது ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் ஆகும்.


இந்தியா சார்பில் மல்யுத்த போட்டியில் பதக்கம் பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் சாக்ஷி. இவருக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் மலை போல் குவிந்து வருகிறது.


இந்த வெற்றி குறித்து சாக்ஷி கூறுகையில், என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்த நாட்டு மக்களை மதிக்கிறேன். அனைவருக்கும் இந்தருணத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.


Find Out More:

Related Articles: