விநாயகர் சதுர்த்தி அன்று பூஜை அறையை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்பு வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும்.
வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதில் விநாயகப் பெருமானின் களி மண் சிலையை வைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் வைத்து பூஜை செய்வது மிகவும் விசேஷம்.
இதனை அடுத்து, விநாயகருக்கு பிடித்த பழவகைகள், கொழுக்கட்டை, அப்பம், அவல், சுண்டல் உள்ளிட்ட இனிப்புகளை பிரசாதமாக விளக்கின் முன் வைக்க வேண்டும். விநாயகருடைய பூஜைக்கு அருகம்புல்லும், எருக்கம்பூவும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதையடுத்து விநாயகருக்கு ஆராதனை காண்பித்து பூஜை செய்ய வேண்டும்.
மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று ஒருவேளை உணவு உண்டு, இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்து வந்தால் மிகவும் நல்லது.