மவுன விரதத்தால் ஏற்பாடுகள் நன்மைகள் என்னென்ன?

Sekar Chandra
இன்றைக்கு ஆன்மீக தகவலில், மவுன விரதம் இருப்பதனால், ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.


கடவுளை நினைத்து, மவுன விரதம் இருப்பதனால், நமது உடல் மற்றும் உள்ளம் தூய்மை அடைகிறது. மேலும் மவுன விரதம் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்கு எவ்வித தடையும் இல்லை. வாய் பேசாமல் மவுனமாக இருப்பதனால், நம்மிடம் இருக்கும் சக்தியை எளிதில் அறிந்துக் கொள்ளலாம். 


மவுனவிரதம் இருந்து வந்தால் நமது உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி நம்மை விழிப்புணர்வாளர்களாக மாற்றும். மவுன விரதம் இருக்கும் போது, சிலர் காகிதம் மூலமாகவோ, சைகை மூலமாகவோ தங்கள் நினைப்பதை வெளிப்படுத்துவர். 


இது மவுன விரதத்திற்கு எதிரான செயல். மவுனவிரதம் இருக்கும் காலத்தில் நாம்  ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ள வேண்டும். நமது உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ நம் உணர்ச்சியை வெளிப்படுத்தக் கூடாது. அப்பொழுது தான் மவுனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்.



Find Out More:

Related Articles: