மாவிளக்கு வழிபாட்டால் ஏற்படும் நன்மைகள்!!!

Sekar Chandra
நாம் அம்மன், காளி போன்ற பெண் தெய்வங்கள் வசிக்கும் கோவில்களில், மாவிளக்கு ஏற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இதனால் ஏற்படும் நன்மைகள் பலருக்கும் தெரியாத நிலையில், இதை பின்பற்றி  வருகின்றனர்.  


மாவிளக்கு ஏற்றுதல், மாக்கோலம் இடுதல் போன்ற வழக்கங்களை  நாம் பின்பற்றி வருகிறோம். இவ்வாறு பின்பற்றி வருவதால், நாம்  ஆரோக்கியமான வாழ்வு பெறலாம். மேலும் நமக்கு கடவுளின் அருளும் கிடைக்கும். 


ஆறு, குளம் இருக்கும் ஊர்களில், அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். ஆறு, குளங்களில் நீராடிய பின்பு, மனத்தூய்மையுடன், சுத்தமாக ஊற வைத்த அரசியை இடித்து மாவாக்க வேண்டும். அதில் சர்க்கரை, இளநீர், ஏலம், போன்ற பொருட்களை கலந்து, அம்மனை நினைத்து உருண்டை பிடிக்க வேண்டும். பிறகு, அம்மன் சந்நிதி முன்பு வாழை இலை விரித்து, மாவு உருண்டையில் குங்குமம் இட்டு, விளக்கேற்ற வேண்டும்.


எங்கள் நோய் நொடியை போக்கி, ஆரோக்கியத்தை தந்து அருளுங்கள் தாயே என்று அம்மனிடம் வழிபட வேண்டும். இந்த வழிமுறையை நாம் பின்பற்றினால், நமக்கு முழு பலனும் கிடைக்கும்.



Find Out More:

Related Articles: