டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் திடீர் மரணம்
பலராலும் ரசிக்கப்படும் டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் ஜீன் டைச் காலமானார். அவருக்கு வயது 95. இன்றும் பலராலும் ரசிக்கப்படும் கார்ட்டூன்களில் முக்கியமானது டாம் அண்ட் ஜெர்ரி. எலியும் பூனையும் ஒன்றை ஒன்று துரத்தும் கார்ட்டூன்களை பார்த்து ரசிக்காத குழந்தைகள் இருக்கமாட்டார்கள். இந்நிலையில் டாம் அண்ட் ஜெர்ரியை இயக்கிய இயக்குநர் ஜீன் டைச் திடீரென மரணமடைந்துள்ளார். அனிமேட்டர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். சிகாகோவில் பிறந்த ஜீன் டைச், முன்ரோ, 'டாம் டெர்ரிஃபிக்', 'பாப்பாய்' உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார். தன்னுடைய இளம் வயதில் வட அமெரிக்காவில் ஏர்ஃபேர்ஸில் பணியாற்றிய டைச், ராணுவத்திலும் வேலை பார்த்திருக்கிறார். விமானம் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்ட டைச், விமானம் ஓட்டுவதற்கனா பயிற்சியையும் பெற்றார். தொடர்ந்து இசை சம்பந்தப்பட்ட துறையிலும் பணியாற்றினார் டைச். 1955 ஆம் ஆண்டு அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கிய டைச்சுக்கு அப்போதுதான் புரிந்தது இதுதான் நமக்கான வேலை என்று. ஆர்வத்துடன் அனிமேஷன் துறையில் பணியாற்றிய டைச், 'சிட்னி தி எலிஃபண்ட்', 'க்ளிண்ட் க்ளாபர்' உள்ளிட்ட கதாபாத்திரங்களை உருவாக்கினார். ஆ
அவார்டுக்கு பரிந்துரைக்கப்படும் அளவுக்கு கொடி கட்டி பறந்தார் டைச். இதனை தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு டைச் சொந்தமாக அனிமேஷன் கம்பெனியை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் விளம்பர படங்களை உருவாக்கி கொடுத்தார். பின்னர் 1960-ஆம் ஆண்டு டைச் உருவாக்கிய 'முன்ரோ' என்ற கார்ட்டூன், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.பலராலும் ரசிக்கப்படும் டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் ஜீன் டைச் காலமானார். அவருக்கு வயது 95. இன்றும் பலராலும் ரசிக்கப்படும் கார்ட்டூன்களில் முக்கியமானது டாம் அண்ட் ஜெர்ரி. எலியும் பூனையும் ஒன்றை ஒன்று துரத்தும் கார்ட்டூன்களை பார்த்து ரசிக்காத குழந்தைகள் இருக்கமாட்டார்கள். இந்நிலையில் டாம் அண்ட் ஜெர்ரியை இயக்கிய இயக்குநர் ஜீன் டைச் திடீரென மரணமடைந்துள்ளார். அனிமேட்டர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். சிகாகோவில் பிறந்த ஜீன் டைச், முன்ரோ, 'டாம் டெர்ரிஃபிக்', 'பாப்பாய்' உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார். தன்னுடைய இளம் வயதில் வட அமெரிக்காவில் ஏர்ஃபேர்ஸில் பணியாற்றிய டைச், ராணுவத்திலும் வேலை பார்த்திருக்கிறார். விமானம் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்ட டைச், விமானம் ஓட்டுவதற்கனா பயிற்சியையும் பெற்றார். தொடர்ந்து இசை சம்பந்தப்பட்ட துறையிலும் பணியாற்றினார் டைச். 1955 ஆம் ஆண்டு அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் பணிக்கு சேர்ந்தார்.
அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கிய டைச்சுக்கு அப்போதுதான் புரிந்தது இதுதான் நமக்கான வேலை என்று. ஆர்வத்துடன் அனிமேஷன் துறையில் பணியாற்றிய டைச், 'சிட்னி தி எலிஃபண்ட்', 'க்ளிண்ட் க்ளாபர்' உள்ளிட்ட கதாபாத்திரங்களை உருவாக்கினார். ஆஸ்கர் அவார்டுக்கு பரிந்துரைக்கப்படும் அளவுக்கு கொடி கட்டி பறந்தார் டைச். இதனை தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு டைச் சொந்தமாக அனிமேஷன் கம்பெனியை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் விளம்பர படங்களை உருவாக்கி கொடுத்தார். பின்னர் 1960-ஆம் ஆண்டு டைச் உருவாக்கிய 'முன்ரோ' என்ற கார்ட்டூன், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.