கடந்த வாரம் நடிகர் எஸ்.வி.சேகர், பத்திரிகையாளர்களை இழிவு படுத்தும் வகையிலான பதிவு ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பாஜக கட்சியின் உறுப்பினரான இவர், பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி தவறான பதிவிட்டதோடு மட்டுமின்றி, அவர்கள் தவறான முறையில் தொழில் செய்வதாகவும் அவர்கள் பிறப்பையே தவறாக கூறும்படியாகவும் இருந்த அந்த பதிவை , கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தது, தெளிவாக தெரிந்தது.
இதனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும் கூட, இவரது உறவினர் தலைமை செயலாளர் என்ற காரணத்தால் கைதிலிருந்து இன்று வரை தப்பி வருகிறார் அவர். எஸ்.வி.சேகரின் பதிவினை கண்டித்து பலரும் பேசி வரும் நிலையில், சென்ற வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி அவதூறான ஒரு பதிவை வெளியிட்டது மன்னிக்க முடியாத குற்றம் என்றார்.
சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் எஸ்.வி.சேகர் பற்றி பேசுகையில் , " பத்திரிக்கையாளர்கள் என்று மட்டுமில்லை, யாரை பற்றி இப்படி பேசினாலும், அது மிகவும் தவறுதான். இப்படி பேசி பதிவிட்டு வருவோர், நிச்சயமாக கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அவ்வாறு பேசும் ஒவ்வொருவருக்கும் தண்டனை வாங்கி தருவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு மரியாதையை கற்றுக் கொடுப்பதும் நம் அனைவரின் கடமையாகும்" என்றார் கமல். எண்பதுகளின் இறுதியில், ரஜினி ,கமல் இருவரோடும் மிஸ்டர் பாரத், சிம்லா ஸ்பெஷல் போன்ற பல படங்களில் இணைந்து நடித்தவர் எஸ்.வி.சேகர் என்பது குறிப்பிடத்தக்கது.