இலவச புடவை வாங்க குடுமிபிடி சண்டை.. உடுத்தியிருந்த சேலையை கிழித்த பெண்கள்- வைரல் வீடியோ

J Ancie


தெலுங்கானா அரசால் வழங்கப்பட்ட இலவச பண்டிகை புடவையை வாங்கிக் கொள்ள முண்டியடித்த பெண்கள் சாலையிலேயே மோசமாக குடுமியை பிடித்துக் கொண்டு சண்டையிட்ட காட்சிகள் வைரலாகியுள்ளது. நவராத்திரி விழாவின்போது கொண்டாடப்படும் பிரபலமான பதுகம்மா விழாவையொட்டி பெண்களுக்கு இலவச பதுகம்மா புடவை வழங்கப்படும் என்று சுதந்திர தினத்தின்போது தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஒரு திட்டத்தை அறிவித்தார்.




அதன்படி 500 டிசைன்கள் கொண்ட ரூ. 222 கோடியில் 1.04 கோடி புடவைகள் துணிகளுக்கான குஜராத் மாநிலத்தில் இருந்தும், தெலுங்கானா கைத்தறி நெசவாளர்களிடமிருந்தும் பெரிய அளவில் கொள்முதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த புடவைகளை நேற்று அரசு கொடுக்க தொடங்கியது. இதற்காக பெண்கள் நீண்ட வரிசையில் கடுப்போடு காத்திருந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது பெண்கள் குடுமிகளை இழுத்து கொண்டு மோசமாக சாலையிலேயே சண்டையிட்டனர். அப்படி முண்டியடித்து வாங்கியும் அந்த புடவை நல்ல தரமாக இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர். இதனால் புடவைகளை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தனர். அந்த புடவைகள் ரூ.50 முதல் ரூ60 வரை மதிப்பு இருக்கும். தரம் குறைவான புடவைகளை கொடுத்து முதல்வர் எங்களை மிகவும் அவமானப்படுத்திவிட்டார். இந்த புடவைகள் தரையை சுத்தமாக துடைக்கக் கூட தரமில்லாதவை என்றனர் பெண்கள்.


" height='150' width='250' width="854" height="480" src="https://www.youtube.com/embed/NL_uuubkcVI" data-framedata-border="0" allowfullscreen="">இதைத் தொடர்ந்து அந்த புடவைகளை நேற்று அரசு கொடுக்க தொடங்கியது. இதற்காக பெண்கள் நீண்ட வரிசையில் கடுப்போடு காத்திருந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது பெண்கள் குடுமிகளை இழுத்து கொண்டு மோசமாக சாலையிலேயே சண்டையிட்டனர். அப்படி முண்டியடித்து வாங்கியும் அந்த புடவை நல்ல தரமாக இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர். இதனால் புடவைகளை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தனர். அந்த புடவைகள் ரூ.50 முதல் ரூ60 வரை மதிப்பு இருக்கும். தரம் குறைவான புடவைகளை கொடுத்து முதல்வர் எங்களை மிகவும் அவமானப்படுத்திவிட்டார். இந்த புடவைகள் தரையை சுத்தமாக துடைக்கக் கூட தரமில்லாதவை என்றனர் பெண்கள்.


Find Out More:

Related Articles: