எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க அதிரடியாக உத்தரவிடுமா ஹைகோர்ட்?

J Ancie




முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவரே உத்தரவிட வேண்டும் என இன்றைய விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க ஒரு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கண்டிப்பாக உத்தரவிட வேண்டும் என்பது திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு. இதனுடன் தகுதி நீக்கத்துக்கு எதிரான தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் வழக்கும் இதொடு சேர்க்கப்பட்டுள்ளன.



இந்த இரு முக்கியமான வழக்குகள் மீதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கின் விசாரணை பெரும் தமிழக மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




அத்துடன் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டு தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் வாக்களிக்க ஒரு வேளை அனுமதிக்கலாம். அதேநேரத்தில் இத விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவுதான் இறுதியானது எனவும் உத்தரவிட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.



Find Out More:

Related Articles: