மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்.. ரஜினியை கூட்டணியில் சேர்க்கவும் ரெடி.. கமல் பரபரப்பு பேச்சு!

J Ancie


மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என்று சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பத்திரிகை நிகழ்ச்சியொன்றில் கமல் தெரிவித்தார். அரசியல் வட்டாரத்தில் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.   தொடர்ந்து அரசியல் கருத்துக்களை பேசி வருபவர் கமல். சமீபத்தில் ஒரு வெப்சைட்டுக்கு அளித்த பேட்டியில், தான், அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் தொடங்குவேன் என அவர் கூறியிருந்தார்.




இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகை நிறுவன விழாவில் கமல் மீண்டும் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.




கமல் பேசுகையில், நான் அரசியலுக்கு வருவது மக்கள் விருப்பம். மக்கள் விரும்பினால் அது நடக்கும் என்று தெரிவித்துள்ளார். 'ஒன்இந்தியாதமிழ்' நடத்திய 'போல்' ஒன்றில் கமல் தனிக்கட்சி தொடங்க அதிகப்படியான வாசகர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதேபோல சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு ஆதரவு அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கமல் இவ்வாறு கூறியுள்ளார்.

Find Out More:

Related Articles: