
அப்துல்கலாம் பிரமாண்டமான மணிமண்டபம் திறக்க மோடி வருகை... ராமேஸ்வரம் போலீசார் ஆலோசனை - வீடியோ
மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிரமாண்டமான நினைவு மணி மண்டபத்தைத் திறந்து வைக்கக பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தர இருக்கிறார். பிரதமருக்கு அளிக்க வேண்டிய பூனைப் படை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு அவரை நல்லடக்கம் செய்த பேய்க்கரும்பு என்னுமிடத்தில் பிரமாண்டமாக நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. மத்திய அரசு அந்த மண்டபத்தை 15 கோடி ரூபாய் செலவில் கட்டி முடித்துள்ளது.
