பல கோடி கடன் பெற்று இங்கிலாந்தில் மிகவும் சொகுசாக தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரும் மனு இன்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று வந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
இந்தியாவிலுள்ள பல வங்கிகளில் சுமார் 9000 கோடி கடனைக் கட்டாமல் பாக்கி வைத்துள்ளவர் விஜய் மல்லையா. சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ், அவர் மீது மத்திய அமலாக்கத்துறை கிரிமினல் வழக்கு தொடர்ந்து ஜெயிலில் அடைக்க முடிவு செய்தது.
இந்நிலையில் விஜய் மல்லையா தனது சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தி திடீரென லண்டன் தப்பிச் சென்றுவிட்டார். லண்டனில் தலைமறைவாக தங்கி இருந்த அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு பல முறை இந்தியா வர சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு எதிராக கோர்ட்டு மூலம் பிடிவாரண்டு உத்தரவிடப்பட்டது.இந்த நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில், அவர் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜரானார் அங்கு பத்திரிக்கையாளரிடம் பேசினார்..அடுத்த இரு மாதங்களுக்குள் இங்கிலாந்து உள்துறைச் செயலாளர் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.