மதுவுக்கு கட்டுப்பாடு... சுற்றுலாப்பயணிகள் குறைவு... என்ன கூத்து?

Sekar Tamil
கொச்சி:
அடப்பாவிங்களா? இப்படியும் நடக்குமா என்று கேள்வி கேட்க வைத்துள்ளது இந்த செய்தி...


விஷயம் இதுதாங்க. கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட மது கட்டுப்பாடு அம்மாநில சுற்றுலா துறையை பின்னாடி தள்ளிடுச்சாம்... அதாங்க... பின்னடைவை ஏற்படுத்திடுச்சாம். இதை என்னன்னு சொல்றது.


கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்திற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளால், அதிக வருமானம் கிடைத்து வந்தது.


கடந்த காங்., ஆட்சியின் போது கேரளாவில் மது விற்பனையை குறைப்பதற்காக சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. நட்சத்திர ஓட்டல்களில் செயல்பட்டு வந்த, 'பார்'கள் மூடப்பட்டன.


இதனால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாம். சர்வதேச மாநாடுகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டு விட்டதாம். இதை சொல்லியிருப்பது சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்க...


இதனால் கேரள சுற்றுலா துறை மிகவும் பின்தங்கி உள்ளது. புதிய அரசு, மதுவிலக்கு கொள்கையில் மாற்றம் செய்தால், சுற்றுலா துறை மேம்படும்' என்று சொல்றாங்க... ஏங்க... மது குடிக்கத்தான் கேரளாவுக்கு வருகிறார்கள் என்று சொன்னால் அது உங்களுக்குதாங்க இழுக்கு....


Find Out More:

Related Articles: