பிறந்த குழந்தை இறந்ததா? புதைக்க சென்ற இடத்தில் அதிர்ச்சி!

Sekar Tamil
டாக்கா:
வங்காளதேசத்தில் பிறந்த குழந்தையை இறந்ததாக கருதி புதைத்த போது அழுததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 


வங்காள தேசத்தில் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர் நஜ்மில் ஹீடா. இவரது மனைவி நஷ்னின் அக்தர். வக்கீல். இவர்களுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்தவுடன் உடல் நலக் கோளாறு ஏற்பட்டது.


தீவிர சிகிச்சை அளித்த டாக்டர் பிறந்த 2 மணி நேரத்தில் அக்குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்து விட்டார். இதனால் விரக்தியடைந்த பெற்றோர் குழந்தையின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்தனர்.


பின்னர் குழந்தையின் உடல் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது இரவு நேரம் என்பதால் மறுநாள் காலையில் உடலை புதைக்க முடிவு செய்தனர். இதனால் குழந்தையின் உடலை அங்கிருந்த பெட்டியில் பத்திரமாக பாதுகாத்தனர்.


குழந்தையை புதைக்க மறுநாள் காலை குடும்பத்தினர் இடுகாடு சென்றபோது பெட்டிக்குள் இருந்த குழந்தை ‘வீல்’ என்ற சத்தத்துடன் அழுதுள்ளது. அவ்வளவுதான் உடனே குழந்தையை டாக்கா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 



Find Out More:

Related Articles: