கொலை செய்த கணவர் உடலுடன் பைக்கில் சென்ற பெண் கைது

frame கொலை செய்த கணவர் உடலுடன் பைக்கில் சென்ற பெண் கைது

Sekar Tamil
ஐதராபாத்:
கொலையும் செய்வாள் பத்தினி என்பது பழமொழி... ஆனால் கணவரை கொன்று உடலை பைக்கில் எடுத்துச் செல்வாள் மனைவி என்பது புது மொழியாகி உள்ளது ஐதராபாத்தில் நடந்த சம்பவத்தால்.


ஐதராபாத் சாலையில் பைக்கில் வேகமாக சென்ற 3 பேரை பார்த்து பணியில் இருந்து கான்ஸ்டபிள்கள் நாகேஸ்வர ராவ், மகேந்திரா ஆகியோருக்கு சந்தேகம் எழுந்தது. 


உடன் அந்த பைக் நிறுத்த கான்ஸ்டபிள்கள் இருவரும் முயற்சி செய்தனர். ஆனால் அந்த பைக் நிற்காமல் செம ஸ்பீடாக செல்ல அவ்வளவுதான்... கான்ஸ்டபிள்கள் இருவரும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த பைக்கை விரட்டு விரட்டு என்று விரட்டினர். ஒருவழியாக அந்த பைக்கை மடக்கி நிறுத்தினர்.


பின்னர் பைக்கில் சென்றவர்களிடம் விசாரணை நடத்த கான்ஸ்டபிள்கள் இருவருக்கும் அதிர்ச்சியோ... அதிர்ச்சி. காரணம்  பைக்கில் சென்ற பெண்ணின் பெயர் பிரவல்லிகா மெண்டம் (25). கணவர் புல்லையா மெண்டம். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் வசித்து வந்துள்ளனர். 


இந்நிலையில் பிரவல்லிகாவுக்கு, 16 வயதே ஆன உறவுக்கார பையனுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை உறவினர்கள் கண்டித்துள்ளனர். தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் ஐதராபாத் பகுதிக்கு குடிபேறினர்.


அப்போது கணவன் மனைவிக்கு பிரச்னை எழுந்துள்ளது. இதில் புல்லையாவை அடித்து கொன்றுள்ளார் பிரவல்லிகா. அவரது உடலுடன் பைக்கில் சென்ற போதுதான் போலீசில் சிக்கியுள்ளார். பிரவல்லிகாவுடன் வந்தவர் குறித்து போலீசார் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. 


இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Find Out More:

Related Articles:

Unable to Load More