தொழிற்சாலையில் பாய்லர் வெடித்தது... பலி எண்ணிக்கை 32 ஆனது

Sekar Tamil
டாக்கா:
வங்காளதேச தலைநகரான டாக்கா அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பலியானவர்களின்  எண்ணிக்கை 32 ஆக உயர்ந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.


டாக்காவின் வடபகுதியில் சிகரெட் மற்றும் உணவுப் பொருட்களை ‘பேக்கிங்’ செய்யும் சரிகை காகிதங்களை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள ஒரு ராட்சத கொதிகலன் (பாய்லர்) திடீரென வெடித்து சிதறியது.


இதனால் தீ மளமளவென பரவியதால் தொழிலாளர்கள் பீதியால் அலறி அடித்தப்படியே வெளியே ஓடிவந்தனர். இருப்பினும் தீயில் சிக்கி 10 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். தீக்காயம் அடைந்த 50-க்கும் அதிகமானோர் டாக்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் பலர் இறந்ததால் இந்த கோர தீவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.


Find Out More:

Related Articles: