டமாஸ்கஸ்:
என்று தீரும் இந்த வேதனை என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. காரணம் இதுதான்.
சிரியாவில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதியான டார்டஸ் நகரில் இன்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 43 பேர் பலியான சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நகரின் மேம்பாலப் பகுதியில் முதலில் தீவிரவாதி ஒருவன் கார் குண்டு தாக்குதலை நடத்தினான். இதில் காயமடைந்தவர்களுக்கு உதவ அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். அப்போது மறைந்திருந்த அந்த தீவிரவாதி மக்கள் கும்பலில் கலந்து தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்ய 43 பேர் பலியாகினர். 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. காயமடைந்தவர்களின் அபாய நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.