பூஜைக்காக குளிக்க சென்றவர்கள்... குளத்தில் மூழ்கி 6 பேர் பலி

frame பூஜைக்காக குளிக்க சென்றவர்கள்... குளத்தில் மூழ்கி 6 பேர் பலி

Sekar Tamil
நாக்பூர்:
சோகம்... சோகம்... என்று மகாராஷ்டிராவில் நடந்துள்ள இந்த சம்பவம் மக்களை பெரும் வேதனையில் தள்ளியுள்ளது.


மகாராஷ்டிராவில் 6 பேர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 5 பேர் இளம் பெண்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ளது சவாங்கி தியோலி என்ற கிராமம்.  இங்கு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முன்பு ஹர்தாலிகா பூஜை நடைபெறும்.


இந்த பூஜையை செய்வதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த மந்தா நாகோஸ் (45), பிரியா ராட் (17), ஜானவ்ஹி சவுத்ரி (13), பூஜா தத்மால் (17), பூணம் தத்மால் (18), பிரணாலி ராட் (16) ஆகியோர் வீட்டருகே இருந்த குளத்திற்குச் குளிக்கச் சென்றனர்.


அப்போது ஒருவர் கால் தடுமாறி குளத்தில் விழுந்துவிட நீச்சல் தெரியாமல் தத்தளித்ததால் மற்ற பெண்கள் அவரை காப்பாற்ற வேண்டி தண்ணீரில் குதித்துள்ளனர். ஆனால் யாருக்கும் நீச்சல் தெரியாததால் ஒருவர்பின் ஒருவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.


இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 



Find Out More:

Related Articles:

Unable to Load More