பெஷாவர்:
தீவிரவாதமே இல்லை என்று மறுப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான் பயங்கரவாத குண்டுவெடிப்புகளால் தினமும் திணறிதான் வருகிறது. இதேபோல் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து தற்கொலைபடை தாக்குதல் நடக்க இதில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின் மர்டன் நகரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் சிறிய குண்டுவெடிப்பு சம்பவத்தை நடந்தது. இதையடுத்து சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடிக்க இதில் 10 பேர் பலியாகி உள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக பெஷாவர் நகரில் கிறிஸ்டியன் காலனியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத அமைப்புடன், தொடர்புடைய ஜமாத் உர் அக்ரர் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. இப்படி பயங்கரவாத சம்பவங்களால் பாகிஸ்தான் தினமும் திணறிக்கொண்டுதான் வருகிறது. இதில் கொடூர சம்பவங்களில் அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.