ஒருநாள்... ஒரே நாள்தான் அனுமதி... கோர்ட் உத்தரவு...

Sekar Tamil
சென்னை:
பண மோசடி வழக்கில் கைதாகியுள்ள பச்சமுத்துவை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


பண மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்டு சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


இந்நிலையில் பச்சமுத்துவை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு காவல்துறை சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 5 நாட்கள் காவலுக்கு அனுமதி மறுத்து ஒருநாள் மட்டும் விசாரணை நடத்த அனுமதி அளித்தது.


மாலை 5.30 மணிக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும். 5 மணி நேரத்திற்கு ஒருமுறை வக்கீலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற பல நிபந்தனைகளை விதித்து நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (1-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டது. 



Find Out More:

Related Articles: