வாஷிங்டன்:
அதிர்ச்சியில் உறைந்துதான் போய்விட்டது அமெரிக்க போர்க்கப்பல் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எதற்கு என்று தெரியுங்களா?
அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் ஓர்முசு நீரிணை பகுதி வழியாக அமெரிக்க போர்க் கப்பல் சென்று கொண்டு இருந்தது. இங்குதான் நடந்துள்ளது ஒரு விபரீதமான சம்பவம்.
என்னவென்றால் ஈரான் நாட்டின் கப்பற்படையை சேர்ந்த கப்பல்கள் படுவேகமாக அமெரிக்க போர்க்கப்பல் மீது மோதுவது போல் வரவே மிகுந்த பதற்றம் உருவாகி உள்ளது.
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ’யூ.எஸ்.எஸ்.நிட்ஸே’ என்ற போர்க்கப்பல் மீதுதான் இப்படி ஈரான் நாட்டின் 2 கப்பல்கள் மோதுவது போல் வந்துள்ளது.
இந்த சம்பவத்தை மிக ஆபத்தானதாகவும், தொழில்முறை பாதுகாப்பை மீறிய அச்சுறுத்தலாகவும் கருதுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டாமை அண்ணனுக்கே ஆட்டம் காட்டி இருக்காங்க பாருங்களேன்...