காஷ்மீர் பாதுகாப்பை கையில் எடுத்த எல்லை பாதுகாப்பு படை

Sekar Tamil
ஸ்ரீநகர்:
ஒரு மாமாங்கத்திற்கு பிறகு இப்போதுதான் இவ்வளவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எங்கு என்கிறீர்களா?


காஷ்மீரில்தான்... 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லைப் பாதுகாப்பு படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


காஷ்மீரில் 2004ம் ஆண்டு முதல், பயங்கரவாதிகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் சி.ஆர்.பி.எப்., படை ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அதற்கு முன் 1991-ம் ஆண்டிலிருந்து 2004 வரை, சுமார் 13 ஆண்டுகள் எல்லை பாதுகாப்பு படைதான் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டது. தற்போது 12 ஆண்டுகளுக்கு பின் காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் நோக்கிலும், காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலையை கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.


Find Out More:

Related Articles: