காஷியான்டெப்:
திருமண விழா... துக்க விழாவாக மாறிய சோகம் துருக்கி நாட்டில் நடந்துள்ளது. மக்களின் மனதை மிகவும் வேதனைப்படுத்தி உள்ளது இந்த சம்பவம்.
துருக்கி நாட்டின் காஷியான்டெப் நகரில் நடந்த திருமண விழாவின் போது குண்டுவெடிப்பு நடக்க இதில் 30 பேர் உயிரிழந்தனர். 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி அரசு இதை பயங்கரவாத தாக்குதலாகவே இதை பார்க்கிறது. காஷியான்டெப் நகரம் சிரியா எல்லைப்பகுதியிலிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு குர்திஷ் இனத்தவர்களே அதிகம் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு நடந்த திருமண விழாவில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 33 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 90 க்கும் மேலானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துருக்கி அரசு பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. திருமண விழா துக்க விழாவாக மாறிய சம்பவம் மக்கள் மனதில் இடியை இறக்கியது போல் உள்ளது.