அப்போ... "அம்மா" இடம் இனி உங்களுக்குதானா?

frame அப்போ... "அம்மா" இடம் இனி உங்களுக்குதானா?

Sekar Tamil
லக்னோ:
இவர்தான்... இவரேதான் செய்யறார்... செய்யறார்... என்று அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசிக்கிறாங்க. அப்போ இவரும் களத்தில் குதிக்கிறார் என்று சொல்லுங்க...


என்ன விஷயம்ன்னா? உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரத்தில் இறங்குகிறார். அதுமட்டுமா... வேட்பாளர்களையும் இவர்தான் தேர்வு செய்கிறார் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. 


உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் இப்பவே அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் கிடுகிடுவென்று இறங்கி வருகின்றன.


 இந்நிலையில் தேர்தல் பிரசாரம் தொடங்கி வைத்த சோனியாவுக்கு திடீரென்று உடல்நிலை பாதித்து பாதியில் முடித்துக்கொண்டார். தற்போது அவரால் பிரசாரத்தில் ஈடுபட முடியாத நிலை. எனவேதான் தற்போது உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் களத்தில் குதித்துள்ளாராம் பிரியங்கா...


தேர்தல் பிரசாரப் பொறுப்பை ஏற்றிருப்பதோடு, வேட்பாளர்களை துணைத்தலைவர் ராகுல் காந்தி உதவியுடன் பிரியங்கா காந்தி தேர்வு செய்து வருகிறாராம். இது எப்படி இருக்கு... இனி அம்மா இடம் உங்களுக்குதானா?


Find Out More:

Related Articles:

Unable to Load More