நியூயார்க்:
என்ன கொடுமைங்க... இது...சரியில்லை என்று அமெரிக்க நிறுவனம் மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. விஷயம் இதுதான்.
தலிபான் தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்யலாம் என கருதி இந்தியருக்கு அதி நவீன காரை விற்க மறுத்த அமெரிக்க நிறுவனத்தின் செயல்தான் தற்போது கோர்ட் வரை வந்துள்ளது.
அமெரிக்க வாழ் இந்தியர் சுர்ஷித் பஸ்சி (50). இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 30 ஆண்டுகளாக தங்கியுள்ளார். இவர் அங்குள்ள ஒரு கார் விற்பனை அலுவலகத்தில் அதி நவீன சுவான்கி மெர்சீடஸ் பென்ஷ் கார் வாங்க விரும்பினார்.
ஆனால் அவருக்கு அந்த காரை விற்பனை செய்ய அந்த நிறுவன மேலாளர் மறுத்து விட்டார். காரணம் புரியாமல் விழித்த சுர்ஜித் பஸ்சி இதுதான் காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எப்படி தெரியுங்களா?
நீங்கள் மிகவும் ஆபத்தான தலிபான் தீவிரவாதிகள் இருக்கும் பகுதியை சேர்ந்தவர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுபோன்ற விலை உயர்ந்த அதி நவீன காரை வாங்கி தலிபான் தீவிரவாதிகளிடம் விற்பனை செய்து விடுகிறார்கள். எனவே, உங்களுக்கு அந்த காரை விற்க முடியாது என்று கூறிவிட்டார்.
அவ்வளவுதான் டென்ஷனான சுர்ஜித் பஸ்கி சம்பந்தப்பட்ட கார் நிறுவனம் மீது ரூ.9 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். பொருளை வாங்க தனக்கு சம உரிமை இருப்பதாகவும், மனுவில் கூறியிருந்தார்.
இனவெறி காரணமாக தனக்கு கார் வழங்க அந்நிறுவனம் மறுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்குதான் தற்போது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.