அட இது யூகம் இல்லீங்க... உண்மைதான்...

Sekar Tamil
பிலிப்பைன்சில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள 160 நீதிபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சரண் அடையும்படி அந்நாட்டு அதிபரே எச்சரிக்கை விடுத்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக ரோட்ரிகோ டியூடெட்ரே பதவி ஏற்க இப்போது இவர் போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு தன் சிங்க முகத்தை காட்டி அவர்களின் கடத்தலுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார். 


போதைப் பொருள் கடத்தல்காரர்களை சுட்டுக் கொல்ல பொதுமக்களை அனுமதிப்பதாக சமீபத்தில் விட்டார் பாருங்க ஒரு அறிக்கை. இது பெரும் பரபரப்பை கிளப்பி விட்டது. 


தற்போது இவரது அடுத்த அதிரடியும், உண்மையை பகிரங்கமாக சொன்னதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டை சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 160 பேரின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டார்.


அவர்களில் நீதிபதிகள், மேயர்கள், போலீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் அடங்குவர் என்பதுதான் வேதனையிலும் வேதனை. இவர்கள் தானாக வந்து சரண் அடைய வேண்டும். இல்லாவிடில் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார். அதிபரின் இத்தகைய நடவடிக்கை அங்கு கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்லவர்... நல்லதுதானே செய்ய முடியும்.


Find Out More:

Related Articles: